“இன்ஸ்டாகிராம் பெண்களுக்கானது” எலான் மஸ்க்கின் கருத்தால் வெடித்த சர்ச்சை
Instagram is for Girls: Elon Musk’s Shocking Remarks: இன்ஸ்டாகிராம் பெண்களுக்கானது என எலான் மஸ்க் தெரிவித்துள்ள கருத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எலான் மஸ்க்கின் சர்ச்சை கருத்து
உலகின் முன்னணி பணக்காரராக அறியப்படும் கடந்த 2022ம் ஆண்டு பிரபலமான ட்விட்டர் என்ற சமூக வலைதளத்தை வாங்கியதோடு அதனை எக்ஸ்(X) என பெயர் மாற்றம் செய்தார்.
X தளத்திற்கு போட்டியாக மெட்டா நிறுவனம் “த்ரெட்ஸ்” என்ற செயலியை அறிமுகப்படுத்தியது.
How to tell what phase of life a girl is in: Posting thirst traps = recently single Posting 5 stories a day and scrolling through so see if he saw it = she’s dating a guy who doesn’t like her She suddenly starts posting home cooked meals, sourdough, and little farmer’s market hauls = she wants a man to know she’s wifey now even though she used to rail lines till 5am If she’s doing Pilates every single day = she’s either in love, heartbroken, or unemployed. (sometimes all 3, depends what time the class is) If she’s training for a marathon = he absolutely fucked her up If she suddenly stops posting = new man If she starts talking about freezing her eggs at dinner = hinge date pushed her into a full existential crisis If she starts saying she’s in her “soft girl era,” = had a psychological collapse and hired a new therapist/Pilates instructor in the same week
— Raq (@raqisright) May 14, 2026
இதையடுத்து X நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், மெட்டா நிறுவனத்தின் சமூக வலைதள செயலிகள் மீது தொடர்ந்து விமர்சனம் வைத்து வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் எக்ஸ் தள பயனர் ஒருவர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் செயலியை நீக்கி விட்டதாக தெரிவித்து இருந்தார்.
அத்துடன் இது இயல்பாகவே பெண்களுக்கான செயலி என்றும், இதில் எந்த பயனும் இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த பதிவுக்கு X தளத்தில் பதிலளித்து இருந்த எலான் மஸ்க், “இன்ஸ்டாகிராம் பெண்களுக்கானது” என குறிப்பிட்டு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார்.
எலான் மஸ்க்கின் இந்த பதிவு கிட்டத்தட்ட 18 லட்சம் பார்வையாளர்களை கடந்து ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்று வருகிறது.
முன்பு ஏற்கனவே(கடந்த மே மாதம்) எலான் மஸ்க்கின் மற்றொரு பதிவில் “சில வளர்ந்த ஆண்கள் எனக்கு அவர்களுடைய இன்ஸ்டகிராம் சுயவிபரத்தை எனக்கு பகிர்வார்கள், அப்போது அவர்களிடம் நான், நீங்கள் பாலினம் மாற்றம் செய்யப் போகிறீர்களா? என்று கேட்பேன் என பதிவிட்டு இருந்தார்.