இந்த ஆண்டில் உலகப்போர் நிச்சயம் நடக்கும்! அதிர்ச்சி கொடுத்த மஸ்க்
2030ஆம் ஆண்டுக்குள் உலகப்போர் நடக்கும் என்று டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எலோன் மஸ்க்
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல், ரஷ்யா-உக்ரைன் மோதல், வெனிசுலா மீதான ட்ரம்பின் எச்சரிக்கை என உலகில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. 
இதனால் உலகப்போர் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்ற அச்சம் சர்வதேச நாடுகளில் உள்ளது.
இந்த நிலையில் எலோன் மஸ்க் (Elon Musk) உலகப்போர் குறித்து கூறியுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எக்ஸ் சமூகவலைதளத்தில் ஹண்டர் ஆஷ் என்ற பயனர் ஒருவர் வெளியிட்ட பதிவில், "போர் அச்சுறுத்தல்கள் இல்லாததால் உலகெங்கிலும் உள்ள அரசுகள் செயலற்றுப் போயுள்ளன. எனவே நிர்வாகத்தில் அவற்றின் செயல்திறன் குறைந்துள்ளது" என்று கூறியுள்ளார்.
போர் நிச்சயம் நடக்கும்
அதற்கு பதிலளித்த எலோன் மஸ்க், "போர் நிச்சயம் நடக்கும். எப்போது என்று நீங்கள் கேட்கலாம். எனது கணிப்புப்படி 2030ஆம் ஆண்டுக்குள் நடக்கும். போர் தவிர்க்க முடியாதது. இன்னும் 5 ஆண்டுகளில் நடக்கும். அதிகபட்சமாக 10 ஆண்டுகளில் அது நடக்கும்" என்றார்.
ஆனால், அவர் தனது கருத்தை விரிவாக கூறவில்லை. இதனால் எக்ஸ் பயனர்கள் இடையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, ஐரோப்பா போரினைத் தொடங்கினால் நாங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) கூறியது குறிப்பிடத்தக்கது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |