ட்விட்டரை எதற்காக வாங்கினேன்? எலான் மஸ்க் அளித்த மிரள வைக்கும் விளக்கம்
சமூக வலைதளமான ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் கையப்படுத்தினார்.
மனிதகுலத்திற்கு உதவும் முயற்சியில் ட்விட்டரை வாங்கினேன்.
சமூக வலைதளமான ட்வீட்டரை மனித குலத்திற்கு உதவும் முயற்சியில் வாங்கியதாக உலகின் முன்னணி பணக்காரர் எலான் மஸ்க் விளக்கமளித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை சமூக வலைதளமான ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் கையப்படுத்தினார்.
இந்த அதிரடி நடவடிக்கையில் தனது உரிமையை வெளிப்படுத்தும் முதல் நடவடிக்கையாக ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் (Parag Agrawal) மற்றும் சில முக்கிய நிர்வாகிகளை நிறுவனத்தில் இருந்து நீக்கினார்.
Entering Twitter HQ – let that sink in! pic.twitter.com/D68z4K2wq7
— Elon Musk (@elonmusk) October 26, 2022
இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை எதற்காக விலைக்கு வாங்கினேன் என டெஸ்லா உரிமையாளர் மற்றும் உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் விளம்பரதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில் விளக்கம் ஒன்றை தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: பிலிப்பைன்ஸை உலுக்கி வரும் நல்கே புயல்: 45 பேர் பலி, மீட்பு பணிகள் தீவிரம்
அதில் சமூக ஊடகங்கள் தீவிர வலதுசாரி மற்றும் தீவிர இடதுசாரி எதிரொலியாக இருப்பதால், பிளவுபடும் பெரும் ஆபத்தின் மத்தியில்” மனிதகுலத்திற்கு உதவும் முயற்சியில் ட்விட்டரை வாங்கியதாக தெரிவித்துள்ளார்.