பிலிப்பைன்ஸை உலுக்கி வரும் நல்கே புயல்: 45 பேர் பலி, மீட்பு பணிகள் தீவிரம்
நல்கே புயல் தாக்கியதில் இதுவரை 45 பேர் உயிரிழப்பு.
இந்த வார இறுதியில் புயல் அதன் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிலிப்பைன்ஸில் கடுமையான வெப்ப மண்டல புயல் தாக்கியதில், குறைந்தது 45 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிலிப்பைன்ஸில் மிண்டானாவ் தீவில் உள்ள மகுயிண்டானாவ் மாகாணத்தை நல்கே புயல் (Nalgae Storm) கடுமையாக தாக்கியதில் மிகப்பெரிய அழிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோடாபாடோ நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் விரிவான வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் வெப்ப மண்டல நல்கே புயலானது வடக்கு நோக்கி நகர்ந்து வருவதால், தலைநகர் மணிலாவில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
Filipinos being rescued from flooding caused by Typhoon Nalgae
— BenarNews Philippines (@BenarNewsPH) October 28, 2022
Authorities said dozens of people died as a result of the torrential rains that began late Thursday. pic.twitter.com/H9mv1GGGMz
இந்நிலையில் நல்கே புயல் தாக்கியதில் இதுவரை 45 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், தென் மாகாணங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் நிலச்சரிவுக்கு பிறகு அடர்ந்த சேற்றில் இருந்து பல உடல்களை மீட்பு குழுவினர் மீட்டு இருப்பதாகவும், புயல் காற்று மணிக்கு 95 km/h (59 mph) வேகத்தில் வீசுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவுக்கூட்டத்தின் பெரும்பகுதியில் படகு சேவையை கடலோர காவல்படை நிறுத்தியுள்ளது. கடலோர காவல்படையினர் பலரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி வருகின்றனர்.
Reuters
வியாழக்கிழமை பெய்ய தொடங்கிய பலத்த மழை, இந்த வார இறுதியில் புயல் அதன் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சனிக்கிழமை அதிகாரிகள் 72 பேர் இறந்ததாக தெரிவித்தனர், ஆனால் அது தற்போது திருத்தப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனிலிருந்து வெளியேறிய மொத்த உணவு தானியங்களின் அளவு: JCC வழங்கிய முக்கிய அறிக்கை
பிலிப்பைன்ஸ் பொதுவாக ஆண்டுக்கு 20 சூறாவளி அல்லது வெப்பமண்டல புயல்களை எதிர்கொள்கிறது.