உக்ரைனிலிருந்து வெளியேறிய மொத்த உணவு தானியங்களின் அளவு: JCC வழங்கிய முக்கிய அறிக்கை
9,239,819 டன்கள் உணவுப் பொருட்கள் உக்ரைனில் இருந்து ஏற்றுமதி.
JCC கருங்கடல் தானிய முன்முயற்சியை ஒருங்கிணைக்க ஜூலை மாதம் அமைக்கப்பட்டது.
போருக்கு பிறகு உக்ரைனில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட உணவு தானியங்களின் அளவு 9 மில்லியன் டன்களை தாண்டியுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகளுக்கு மத்தியில் உலகிற்கான தானிய ஏற்றுமதி தடைபடாமல் இருக்க, உக்ரைன், ரஷ்யா, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் துருக்கி ஆகியவை இணைந்து ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டனர்.
அதனடிப்படையில் எந்தவொரு தடையும் இல்லாத வகையில் உக்ரைனில் இருந்து உணவு தானிய ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
EPA
வெள்ளிக்கிழமை, ஆறு கப்பல்கள் உக்ரைனில் இருந்து 223,430 டன் தானியங்கள் மற்றும் பிற பொருட்களுடன் இஸ்ரேல், பெல்ஜியம், சீனா, இத்தாலி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்குச் சென்று பதப்படுத்தப்பட்டு பிற நாடுகளுக்கு அனுப்பப்பட்டன.
இந்நிலையில் அக்டோபர் 27 நிலவரப்படி இந்த ஆண்டு உக்ரைனில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தானியங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களின் அளவு 9,239,819 டன்கள் என்று கூட்டு ஒருங்கிணைப்பு மையம் (JCC) சனிக்கிழமை அறிவித்துள்ளது.
மேலும் 101 கப்பல்கள் ஆய்வுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 76 கப்பல்கள் இந்த முயற்சியில் சேர விண்ணப்பித்துள்ளதாகவும் ஜேசிசி தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: பிரேவர்மேன் வெடிக்கக் காத்திருக்கும் சாத்தியமான குண்டு: பணி நீக்கம் செய்ய ரிஷி சுனக்கிற்கு அதிகரிக்கும் அழுத்தம்
இந்த கூட்டு ஒருங்கிணைப்பு மையம் (JCC) உக்ரேனிய விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான கருங்கடல் தானிய முன்முயற்சியை ஒருங்கிணைக்க ஜூலை மாதம் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.