பிரேவர்மேன் வெடிக்கக் காத்திருக்கும் சாத்தியமான குண்டு: பணி நீக்கம் செய்ய ரிஷி சுனக்கிற்கு அதிகரிக்கும் அழுத்தம்
புலம்பெயர்ந்தவர்களை கவர்ந்திழுப்பதற்கான “வளர்ச்சி விசா” திட்டத்தை சுயெல்லா பிரேவர்மேன் கசியவிட்டதாக தி சன் அறிக்கை.
உள்துறை செயலர் உறுதியளிக்க வேண்டும் என்று பிரதமர் ரிஷி சுனக்கிற்கு தொழிலாளர் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
உள்துறை செயலாளர் சந்தை உணர்திறன் குடியேற்ற திட்டங்களை கசியவிட்டதாக தி சன் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டதை தொடர்ந்து, சுயெல்லா பிரேவர்மேனை பணிநீக்கம் செய்ய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.
அரசின் முக்கிய ஆவணங்களை தனது தனிப்பட்ட மின்னஞ்சலில் இருந்து சக ஊழியருக்கு பகிர்ந்து கொண்டாதாக தெரிவித்து, தனது பதவியை ராஜினாமா செய்த சுயெல்லா பிரேவர்மேன், ரிஷி சுனக் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் மீண்டும் ராஜினாமா செய்த 6 நாட்களுக்கு பிறகு உள்துறை செயலாளராக அமர்த்தப்பட்டுள்ளார்.
Rex
இதனை தொடர்ந்து முன்னாள் பிரித்தானிய பிரதமராக லிஸ் டிரஸ் இருந்த போது £14 பில்லியன் ஊக்கத்தில் பிரித்தானியாவிற்கு திறமையான புலம்பெயர்ந்தவர்களை கவர்ந்திழுப்பதற்கான “வளர்ச்சி விசா” திட்டத்தை சுயெல்லா பிரேவர்மேன் கசியவிட்டதாக நேற்று தி சன் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில் உள்துறை செயலாளர் சுயெல்லா பிரேவர்மேனை பணிநீக்கம் செய்ய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.
தி சன் செய்தி நிறுவனத்தின் அறிக்கை வெளியானதை தொடர்ந்து, கருவூலத்தின் நிழல் தலைமைச் செயலாளரான பாட் மெக்ஃபேடன், "அரசாங்கத்திற்கு வெளியே உள்ளவர்களுடன் அறிவிக்கப்படாத சாத்தியமான குடியேற்றக் கொள்கை முடிவுகளைப் பற்றிய தகவல்களை உள்துறைச் செயலர் பகிர்ந்துகொள்வது வியப்பளிக்கிறது" என்று தெரிவித்தார்.
Alamy
பிரித்தானிய பொருளாதாரத்திற்கு இடையூறு விளைவிக்க மாட்டார் என்று உள்துறை செயலர் உறுதியளிக்க வேண்டும் என்று பிரதமர் ரிஷி சுனக்கிற்கு தொழிலாளர் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
மேலும் நேற்றிரவு சிவில் சர்வீஸின் முன்னாள் தலைவர், பிரேவர்மேனின் மறு நியமனம் வெடிக்கக் காத்திருக்கும் "சாத்தியமான குண்டு" என்றார்.
லார்ட் பாப் கெர்ஸ்லேக் டைம்ஸ் ரேடியோவிடம் தெரிவித்த கருத்தில் சுயெல்லா பிரேவர்மேன் ஒரு தொடர் கசிவு போல் தெரிகிறது, அவர் ஒரு முறை கசிய விட்டார், அதை மீண்டும் செய்ய எல்லா வாய்ப்புகளும் உள்ளன, இது ரிஷி சுனக்கிற்கு மோசமான செய்தியாக இருக்கும் என தெரிவித்தார்.
The Quint
கூடுதல் செய்திகளுக்கு: அரச குடும்ப உறவுகளுக்கு புத்தகம் முடிவு கட்டும்: மன்னரின் அழைப்பை நிராகரித்த இளவரசர் ஹரி மற்றும் மேகன்
இதற்கிடையில் பிரதமர் ரிஷி சுனக், சுயெல்லா பிரேவர்மேனை உள்துறை செயலாளராக மீண்டும் பணியமர்த்தியதற்கு வருத்தப்படவில்லை, அவர் தவறை ஒப்புக்கொண்டார் என்று வலியுறுத்தினார்.
அத்துடன் அவர் தனது தவறிலிருந்து கற்றுக்கொண்டார் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.