பறக்கும் ரோட்ஸ்டர் காரை அறிமுகப்படுத்திய டெஸ்லா
elon musk tesla reveals flying car roadster: எலான் மஸ்க்கின் பிரபல மின்சார கார் தயாரிப்பு டெஸ்லா தனது Roadster என்ற பறக்கும் ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகம் செய்துள்ளது.
டெஸ்லாவின் பறக்கும் ரோட்ஸ்டர் கார்
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட Roadster கார் குறித்து டெஸ்லா பகிர்ந்துள்ள செயல் விளக்க வீடியோவில், வாகனம் ஒரு பிரம்மாண்டமான வளைவான சரிவுப்பாதையில் ஏறி, தலைகீழாக அதன் வழியே தொடர்ந்து சென்று, பின்னர் காற்றில் பறந்து பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

விமானம் போல் நீண்ட நேரம் பரப்பில் ஈடுபடாமல், சில வினாடிகள் பறக்கும் திறனை கொண்டதாக காட்டப்பட்டுள்ளது.
வாகனம் பறக்கும் போது, வாகனத்தின் கீழிருந்து வெள்ளை வாயு வெளியேறியது, அதுவே அதனை மேலே தூக்குவதற்குத் தேவையான உந்துவிசையை வழங்கியதாகத் தெரிகிறது.
Turns out the future does have flying cars https://t.co/6fexPp6SXI
— Elon Musk (@elonmusk) October 16, 2026
அந்த ரோட்ஸ்டர் காரை நடுவானில் தூக்கிச் சுழற்றுவதற்காக, 600 லிட்டர் அழுத்தப்பட்ட காற்றுடன் இணைக்கப்பட்ட 10 த்ரஸ்டர்களைப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த வாகனம் 1 வினாடியில் மணிக்கு 0 முதல் 60 மைல் வேகத்தை எட்டும் என்று டெஸ்லா கூறியது.
இந்த ரோட்ஸ்டர் சுமார் 300 மைல்கள் பயண வரம்பையும், மணிக்கு 230 மைல்களுக்கு மேல் உச்ச வேகத்தையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காரின் உற்பத்தி, 2028 ஆம் ஆண்டில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்லா, ரோட்ஸ்டர் 2 காரை பெர்ஃபார்மன்ஸ், த்ரஸ்ட், ரொக்கெட் என 3 வகைகளில் வழங்குகிறது.
Roadster event livestream https://t.co/G0jU4mWfid
— Tesla (@Tesla) October 15, 2026
பெர்ஃபார்மன்ஸ் என்று அழைக்கப்படும் முதல் வகை, சாலைப் பயணத்திற்குத் தயாரானது என விவரிக்கப்பட்டுள்ளது. இதனை 50,000 டொலர் (இந்திய மதிப்பில் ரூ.47 லட்சம்) செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
த்ரஸ்ட் எனப்படும் இரண்டாம் நிலை, பந்தயத்திற்குத் தயாரானது என விவரிக்கப்பட்டுள்ள காரை 2,50,000 டொலர் (இந்திய மதிப்பில் ரூ.2.37 கோடி) செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ராக்கெட் எனப்படும் உச்ச நிலை காரை டெஸ்லா வான்வழிப் பயணத்திற்குத் தயாரானது என விவரித்துள்ளது. இதை முன்பதிவு செய்ய முடியாது. அழைப்பின் பேரில் மட்டுமே வழங்கப்படும்