ட்விட்டரின் வருவாயை 5 மடங்காக உயர்த்த எலான் மஸ்க் திட்டம்!
எலான் மஸ்க் 2028-ஆம் ஆண்டிற்குள் ட்விட்டரின் வருவாயை ஐந்து மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
மின்சார கார் தயாரிக்கும் நிறுவனமான டெஸ்லா மற்றும் விண்கலம் தயாரிக்கும் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றின் நிறுவனரும், அமெரிக்க கோடீஸ்வரர் எலோன் மஸ்க், ட்விட்டரின் ஆண்டு வருவாயை 2028-ஆம் ஆண்டுக்குள் 26.4 பில்லியன் டொலராக உயர்த்த உத்தேசித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளன.
எலான் மஸ்க் ட்விட்டரின் வருவாயை 5 மடங்கு உயர்த்துவார் என்றும், 2021-ல் 5 பில்லியன் டொலர்களாக இருந்த நிலையில், 2028-ஆம் ஆண்டில் 26.4 பில்லியன் டொலர்களாக உயர்த்துவார் என்று நியூ யார்க் டைம்ஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2028-ஆம் ஆண்டில் விளம்பரரத்தின் மூலம் 12 பில்லியன் டொலர் வருவாயையும், சந்தாக்கள் மூலம் 10 பில்லியன் டொலர்களையும் ஈட்டும் என்று கூறி, ட்விட்டரின் மொத்த வருவாயில் 45 சதவீதமாக விளம்பரத்தை நம்பியிருப்பதைக் குறைக்கவும் மஸ்க் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரொறன்றோ குப்பைத்தொட்டியில் சிறுமியின் சடலம்: கனேடிய பொலிஸை அதிரவைத்துள்ள சம்பவம்!
மேலும், தரவு உரிமம், டிப்பிங் மற்றும் ஷாப்பிங் போன்ற பல்வேறு வணிகங்களிலிருந்து பிற வருவாய் உருவாக்கப்படஉள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2028-ஆம் ஆண்டில் ஒரு பயனருக்கான சராசரி வருவாயை 30.22 அமெரிக்க டொலராக அதிகரிக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார். அப்போது ட்விட்டர் 931 மில்லியன் பயனர்களை எட்டும் என்று கூறப்படுகிறது.
ரஷ்யாவின் அதிநவீன டாங்கியை அழித்த உக்ரைன்! சீரமைக்க ரஷ்யாவுக்கு காத்திருக்கும் சவால்...
கடந்த மாதம் சுமார் 44 பில்லியன் டொலர் மதிப்பிலான பரிவர்த்தனையில் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்தினார். சமூக வலைத்தளமான ட்விட்டரில் புரட்சி செய்ய விரும்புவதாக கூறிய அவர், அதில் பேச்சு சுதந்திரம் இருக்கும் என்று கூறினார்.