திருநங்கையாக மாறிய எலான் மஸ்கின் மகன்: தந்தை மீது கூறும் குற்றச்சாட்டு
எலான் மஸ்கின் பிள்ளைகளில் ஒருவர் திருநங்கையாக மாறி தற்போது தன்னை பெண் என அழைத்துக்கொள்கிறார். எலான் மஸ்கின் அந்த ’மகள்’ தன் தந்தை மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
திருநங்கையாக மாறிய எலான் மஸ்கின் மகன்
எலான் மஸ்கின் பிள்ளைகளில் ஒருவர் சேவியர் அலெக்சாண்டர் மஸ்க் (Xavier Alexander Musk). ஆனால், 18 வயதானதும், தன் பெயரை விவியன் ஜென்னா வில்சன் என மாற்றிக்கொண்டு தான் பெண்ணாக மாறிவிட்டதாக கூறியிருந்தார் சேவியர் என்னும் விவியன்.
தற்போது விவியனுக்கு 20 வயதாகிறது. இந்நிலையில், தான் ஒரு திருநங்கை என தெரியவந்ததும், தன் தாயான ஜஸ்டின் வில்சன் தன்னை ஏற்றுக்கொண்டதாகவும், தனக்கு முழு ஆதரவளித்ததாகவும் தெரிவித்துள்ளார் விவியன்.
ஆனால், தன் தந்தையான எலான் மஸ்க் தான் பெண்ணாக மாறியதை விரும்பவில்லை என்றும், தனக்கு அவர் ஆதரவாக இல்லை என்றும் கூறியுள்ளார் விவியன்.
தனக்கு ஹார்மோன் சிகிச்சை போன்ற விடயங்களுக்கு தன் தந்தையின் அனுமதி தேவைப்பட்ட அந்த நேரத்தில், தான் பல மாதங்களாக எலான் மஸ்குடன் பேசவில்லை என்றும் விவியன் கூறியுள்ளார்.
தான் தன் தந்தையான எலான் மஸ்குடன் வாழவில்லை என்றும், வாழ்க்கையில் அவருக்கும் தனக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை என்பதை காட்டுவதற்காகவே தன் பெயரிலிருந்து தன் தந்தையின் பெயரான மஸ்க் என்பதை நீக்கிவிட்டு, தன் தாயின் பெயரான வில்சன் என்னும் பெயரை சேர்த்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் விவியன்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |