திவாலாகும் நிலையில் ட்விட்டர்! ஊழியர்களை எச்சரித்த எலான் மஸ்க்
வாரம் 80 மணிநேரம் வேலைக்கு தயாராகும்படி எலான் மாஸ்க் தனது ட்விட்டர் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ட்விட்டரில் எலோன் மஸ்க்கின் ஆட்சியின் குழப்பமான தொடக்கத்தின் மத்தியில் இந்த எச்சரிக்கை வந்தது
ட்விட்டர் திவாலாகும் நிலை
ட்விட்டரை 44 பில்லியன் டொலருக்கு வாங்கிய பிறகு, உலக பெரும்பணக்காரர் எலான் மஸ்க் நிறுவன ஊழியர்களுக்கு வியாழக்கிழமை தனது முதல் உரையை ஆற்றினார்.
அப்போது, உடனடியாக அதிக பணத்தை உருவாக்கத் தொடங்கவில்லை என்றால் ட்விட்டர் நிறுவனம் திவாலாகும் நிலைக்கு தள்ளப்படும் என கூறினார்.
மஸ்க் எச்சரிக்கை
இதனால், ஊழியர்களுக்கு அவர் ஆற்றிய உரையில், மஸ்க் பல எச்சரிக்கைகளை விடுத்தார். ட்விட்டர் ஊழியர்கள் இனி வாரம் 80 மணி நேரம் வேலை பார்க்க தயாராக வேண்டும், இலவச உணவு போன்ற அலுவலக சலுகைகள் குறைவாக இருக்கும் என்று கூறினார். மேலும், ஊழியர்கள் இனி வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி இல்லை என்றும் தெரிவித்தார்.
இவற்றுக்கு விருப்பம் இல்லை என்றால், அவர்களது ராஜினாமா உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நிலையில், அவர் எல்லாவற்றுக்கும் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
CREDIT: KEVIN KREJCI/FLICKR CC BY 2.0
கொந்தளிப்பான தொடக்கம்
ட்விட்டர் நிறுவனத்தில் மஸ்க்கின் ஆட்சியின் கொந்தளிப்பான தொடக்கத்திற்கு மத்தியில் இந்த எச்சரிக்கை வந்தது. ட்விட்டரை விலைக்கு வாங்கிய இரண்டு வார காலப்பகுதியில் அவர் மொத்த ஊழியர்களில் பாதி பேரை பணிநீக்கம் செய்தார், பெரும்பாலான உயர் நிர்வாகிகளை வெளியேற்றினார் மற்றும் மீதமுள்ள ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்வதை நிறுத்த உத்தரவிட்டார்.