இஸ்ரோவுக்கு எலான் மஸ்க் வாழ்த்து!
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான எலான் மஸ்க், இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மனிதா்களை முதன் முதலாக விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) மேற்கொண்டு வருகிறது.
திரவ எரிபொருள் நிரப்பிய விகாஸ் என்ஜின் சோதனை 3-வது முறையாக மகேந்திரகிரி திரவ இயக்க உந்தும வளாகத்தில் 240 விநாடி (4 நிமிடம்) மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனை திட்டமிட்ட நேரத்துக்குள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ நேற்று தெரிவித்தது.
இந்நிலையில், விகாஸ் என்ஜினின் சோதனை ஓட்டத்தை மேற்கொண்டதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான எலான் மஸ்க், இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Congratulations! ??
— Elon Musk (@elonmusk) July 14, 2021
உலகின் முன்னணி பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மஸ்க், மனிதர்களை பிற கிரகங்களில் அமர வைப்பதை லட்சியமாக கொண்டவர். போட்டியாளராக இருந்தபோதிலும், பல சமயங்களில் எலான் மஸ்க் இஸ்ரோவை வெகுவாக பாராட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் Falcon 9 ரொக்கெட் மூலமாக விண்வெளி வீரர்களை பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது. அப்போது இஸ்ரோ ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசாவை "வரலாற்று முதல் ஏவுதலுக்கு" வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
Congratulations to #NASA and #SpaceX for historic first launch of manned mission after 2011. Great job !
— ISRO (@isro) June 1, 2020