இத்தாலியின் பெண் பிரதமருடன் எலான் மஸ்க்: சர்ச்சையை உருவாக்கியுள்ள புகைப்படம்
இத்தாலி நாட்டின் பிரதமருடன் உலக் கோடீஸ்வரரான எலான் மஸ்க் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.
இத்தாலியின் பெண் பிரதமருடன் எலான் மஸ்க்
உலகத் தலைவர்களுடன் இனிமையாகப் பழகும் குணம் கொண்டவர் இத்தாலி பிரதமரான ஜார்ஜியா மெலோனி.
G7 உச்சி மாநாட்டின்போது, ஞாபக மறதியாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எங்கோ நடந்து செல்ல, ஓடோடிச் சென்று அவரை பத்திரமாக மெலோனி அழைத்து வந்த காட்சியை யாரும் மறக்கமுடியாது.
ஆனால், அவரது அந்த குணமே இப்போது ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
ஆம், இந்த வாரம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எலான் மஸ்கும், மெலோனியும் ஒருவரையொருவர் அன்புடன் பார்த்துக்கொள்ளும் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் தனக்கு வழங்கப்பட இருந்த Global Citizen Award என்னும் விருதை தனக்கு எலான் மஸ்க் வழங்கவேண்டும் என மெலோனி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
விருது வழங்கும்போது, மெலோனியின் உடலை விட அவரது மனது இன்னும் அழகு என்று வேறு கூறினார் எலான் மஸ்க்.
அது தொடர்பான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, அடுத்து என்ன நடந்திருக்கும் என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும் என சமூக ஊடகம் ஒன்றில் நெட்டிசன் ஒருவர் கேலியாக கருத்து தெரிவிக்க, அந்த இடுகை வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
We all know what happened next… 😏 pic.twitter.com/lgoxGsiEun
— Dr. Simon Goddek (@goddeketal) September 24, 2024
எலான் மஸ்க் மறுப்பு
ஆனால், தங்களுக்குள் காதல் எதுவும் இல்லை என மறுத்துள்ள எலான் மஸ்க், நான் அந்த நிகழ்ச்சிக்கு எனது அம்மாவுடன் சென்றிருந்தேன்.
எனக்கும் பிரதமர் மெலோனிக்கும் இடையில் அப்படி காதல் சம்பந்தமான உறவு எதுவும் இல்லை என்று சமூக ஊடகமான எக்ஸில் தெரிவித்துள்ளார் எலான் மஸ்க்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |