"பூமியில் இருப்பதே இனப்பெருக்கம் செய்யத்தான்" வளர்ப்பு மகளுடன் 2-வது குழந்தை பெற்ற எலான் மஸ்க் தந்தை!
எலோன் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க், தனது வளர்ப்பு மகளுடன் (Step-Daughter) அவருக்கு இரண்டாவது குழந்தை இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
தி சன் உடனான சமீபத்திய நேர்காணலில் 76 வயதான எரோல் மஸ்க் இதனை வெளிப்படுத்தினார்.
மேலும், "நாம் பூமியில் இருப்பது இனப்பெருக்கம் செய்வதற்காக மட்டுமே" என்று அவர் கூறியுள்ளார்.
ஜனா பெசுய்டன்ஹவுட் (Jana Bezuidenhout) என்பவர் எரோல் மஸ்க்கின் இரண்டாவது மனைவியான Heide Bezuidenhout-ன் மகளாவார். அவர் Heide Bezuidenhout-ன் முன்னாள் கணவருக்கு பிறந்தவர்.
அவர் 1979-ல் எலோனின் தாயார் மேய் ஹால்டெமன் மஸ்க்கைப் பிரிந்த பிறகு ஹெய்டை மணந்தார். எரோல் மஸ்க் அவரது மாற்றாந்தாய் ஆனபோது ஜனாவுக்கு நான்கு வயது.
ஜனா பெசுய்டன்ஹவுட்டுக்கும் எரோல் மஸ்க்கிற்கும் இரண்டாவதாக பிறந்ததாக கூறப்படும் அந்த குழந்தை மொன்று வருடங்களுக்கு முன்பே 2019-ம் ஆண்டிலேயே பிறந்தது, ஆனால் அவர் இப்போது தான் அந்த செய்தியை வெளியுலகிற்கு உறுதிப்படுத்தினார்.
எரோல் மஸ்க் மற்றும் ஜனாவிற்குமான முதல் குழந்தை 2017-ல் பிறந்தது. Elliot Rush Musk என பெயரிடப்பட்ட அந்த ஆண் குழந்தைக்கு இப்போது 5 வயது.
நேர்காணலில், 76 வயதான மஸ்க் இரண்டாவது குழந்தை திட்டமிடப்படாதது என்று பகிர்ந்து கொண்டார். “நான் அவளுடைய டிஎன்ஏவைச் சரிபார்க்கவில்லை. ஆனால் அவள் என் மற்ற மகள்களைப் போலவே இருக்கிறாள். அவள் ரோஸும் டோஸ்காவும் கலந்திருப்பது போல் தெரிகிறது. அவள் ருஷியைப் போலவே இருக்கிறாள், அவள் அவனைப் போலவே நடந்துகொள்கிறாள். எனவே இது உங்களுக்குத் தெரியும், ”என்று அவர் கூறியுள்ளார்.