போர் பதற்றத்தால் கம்போடியாவுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் - தூதரகம் எச்சரிக்கை
கம்போடியா நாட்டிற்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
போர் சூழல்
தாய்லாந்து - கம்போடியா இடையே எல்லை மோதல் நிலவி வருவது போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருதரப்பிலும் தாக்குதல்கள் நடத்தியதில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், சுமார் 1,70,000 பேர் எல்லைப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஐ.நா சபை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என இரு நாடுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும் இதுவரை உடன்பாடு எட்டப்படாததால், எல்லையில் போர்ப்பதற்றம் தொடர்கிறது.
இந்தியர்கள் செல்ல வேண்டாம்
இந்நிலையில் தற்போதைய சூழலில் கம்போடியா நாட்டிற்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் ஏற்கனவே அங்கு இருக்கும் இந்தியர்கள் தூதரகத்தை தொடர்புகொள்ள +855 92881676 என்ற உதவி எண் மற்றும் cons.phnompenh@mea.gov.in என்ற மின்னஞ்சலையும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, தாய்லாந்து நாட்டிற்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என தூதரகம் சார்பில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |