இந்தியாவின் செயற்கைக்கோள்களை 3 மடங்காக அதிகரிக்க ISRO திட்டம்
3 ஆண்டுகளில் இந்தியாவின் செயற்கைக்கோள் எண்ணிக்கையை 3 மடங்காக உயர்த்தவேண்டும் என ISRO தலைவர் டாக்டர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.
தற்போது 55 செயற்கைக்கோள்கள் மட்டுமே உள்ள நிலையில், நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய மூன்று ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை 150-ஆக உயர்த்த வேண்டும் என்று ஆவர் கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற ஜி.பி. பிர்லா நினைவு உரையில் பேசும் போது, அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.
2040-க்குள் இந்தியா, உலக அளவிலான விண்வெளி தொழில்நுட்ப தரங்களை அடைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
2028-ல் இந்திய விண்வெளி நிலையத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்படும். முழுமையான விண்வெளி நிலையம் 2035 வரை அமைக்கப்படும்.
ககன்யான் மனிதர் விண்வெளிப் பயணம் திட்டம் 2027-இல் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல், ஜப்பானுடன் இணைந்து சந்திரயான்-5/LUPEX திட்டம் மேற்கொள்ளப்படுவதையும், 6,500 கிலோ எடையுடைய அமெரிக்கத் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் இந்திய ரொக்கெட்டில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
ஸ்ரீஹரிக்கோட்டாவில் ரூ.4,000 கோடியில் புதிய ஏவுதளமும் அமைக்கப்பட உள்ளது.
மேலும், மின்சாரம் மற்றும் அணுசக்தி இயக்கக் கருவிகள், மறுபயன்பாட்டு விண்வெளி வாகனங்கள், மற்றும் SPADEX போன்ற முன்னேற்றங்கள் குறித்தும் அவர் விளக்கினார்.
இஸ்ரோவில் கடந்த ஒரு தசாப்தத்தில் 518 செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் 433 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் அடங்கும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
ISRO satellite expansion, ISRO chairman V Narayanan speech, India space station 2028, Gaganyaan human mission 2027, Chandrayaan 5 LUPEX mission, Sriharikota third launch pad, ISRO NASA NISAR launch, ISRO future plans 2025, ISRO Venus Mars missions, Indian satellites in space 2025