அமெரிக்காவின் முக்கிய மாநிலத்தில் அவசரநலை பிரகடனம்! 15 மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை
அமெரிக்காவின் முக்கிய மாநிலங்களில் ஒன்றான புளோரிடாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
எல்சா புயல் நெருங்குகையில் புளோரிடா கவர்னர் Ron DeSantis அவசரநிலை பிரகடனப்படுத்தியுள்ளார்.
எல்சா புயல் திங்களன்று புளோரிடாவை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று கவர்னர் Ron DeSantis, புயல் கடக்கும் சாத்தியமான பாதையாக கருதப்படும் புளோரிடாவின் 15 மாவட்டங்களுக்கு அவசரநிலையை அறிவத்து ஆணை பிறப்பித்தார்.
மாநிலத்தின் தெற்குப் பகுதியில் உள்ள மக்கள் திங்கட்கிழமைக்குள் கடும் மழை, வெள்ளம் மற்றும் புயல் பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராகுமாறு கவர்னர் வலியுறுத்தியுள்ளார்.
எல்சா புயலின் தீவிரமும் தடமும் நிச்சயமற்றதாக இருப்பதாக மாநில அரசு எச்சரித்துள்ளது.
அமெரிக்க தேசிய சூறாவளி மையத்தின்படி, எல்சா சனிக்கிழமை மெதுவாக ஜமைக்கா மற்றும் கிழக்கு கியூபாவின் சில பகுதிகளுக்கு அருகில் நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.