அமீரக குலுக்கலில் பல லட்சங்களை குவித்த புதுமாப்பிள்ளை.., திருமண செலவுக்கு கிடைத்ததாக நெகிழ்ச்சி
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டிராவில் ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பல லட்சங்களை வென்றுள்ளார்.
Emirates Draw
Emirates Draw என்பது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கேமின் ஆபரேட்டர் ஆகும். இதில் நடைபெறும் குலுக்கலானது பொழுதுபோக்கு, தனிநபர்கள் மற்றும் சமூகத்தை ஆதரிக்கும் வகையில் இருக்கும்.
இதில் MEGA7, EASY6 மற்றும் FAST5 என மொத்தம் மூன்று கேம்கள் உள்ளன. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு வாரம் தோறும் மில்லியன் கணக்கான திர்ஹாம்கள் கிடைக்கிறது.
FAST5 என்பது ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நடைபெறும் குலுக்களாகும். இதில் வென்றால் 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 25,000 திர்ஹாம்கள் கிடைக்கும்.
ரூ.17 லட்சம் வென்ற இளைஞர்
இந்நிலையில், ஹைதராபாத்தை சேர்ந்த மொஹ்சின் கான்(34) என்பவர் இரண்டாவது முறையாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குலுக்கலில் மெகா பரிசை வென்றுள்ளார். இவர், அங்கு சேல்ஸ் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.
இவர் FAST5 டிராவில் 75,000 திர்ஹாம்களை வென்றுள்ளார். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 16,98,317 ஆகும். இவருக்கு இந்த ஆண்டில் திருமணம் நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து இளைஞர் கூறுகையில், "நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். திருமண செலவுக்கு என்ன செய்வது என்று கவலைப்பட்டு இருந்தேன். இதனால் எனது புதிய வாழ்க்கையை தொடங்க உள்ளேன்" என்றார்.
முன்னதாக மொஹ்சின் கான், கடந்த ஆண்டு மார்ச் மாதம் Emirates Draw Easy6 குலுக்கலில் 15,000 திர்ஹாம்களை வென்றார். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 3,39,709 ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |