பிரான்சுக்கு புதிய பிரதமரை நியமித்தார் ஜனாதிபதி மேக்ரான்: யார் அவர்?
பிரான்சின் புதிய பிரதமராக தனது ஆதரவாளர் ஒருவரை நியமித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.
யார் அவர்?
பிரான்சின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவரின் பெயர் செபாஸ்டியன் லெக்கார்னு.
குறைந்த வயதில் பிரான்சின் ராணுவ அமைச்சராக பணியாற்றிய லெக்கார்னு, உள்நாட்டிலும் கடல் கடந்த பிரதேசங்களிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஆவார்.
2017ஆம் ஆண்டு மேக்ரான் கட்சியில் இணைந்த லெக்கார்னு, உக்ரைன் போர் துவங்கியதைத் தொடர்ந்து பிரான்ஸ் ராணுவம் விரிவாக்கம் செய்யப்படுவதன் பின்னணியில் முக்கியப் பங்காற்றியவர் ஆவார்.
பிரான்ஸ் முழுவதையும் ஸ்தம்பிக்கவைத்த மஞ்சள் மேலாடை போராட்டம், Guadeloupe தீவில் கோவிட் தொடர்பில் நடைபெற்ற போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் முதலான பிரச்சினைகள் முடிவுக்கு வர முயற்சிகள் மேற்கொண்டதில் லெக்கார்னுவுக்கு முக்கிய பங்கு உண்டு.
துரித முடிவெடுத்த மேக்ரான்
முதைய பிரதமரான பிரான்சுவா பேய்ரூ (Francois Bayrou) நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியிருந்த நிலையில், அவரை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருந்ததுடன், ஜனாதிபதி மேக்ரானையும் பதவி விலக வைக்க அழுத்தம் கொடுக்க திட்டமிட்டிருந்தன.
அத்துடன், 'Block Everything’ என்னும் அமைப்பு இன்று, அதாவது, செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி, நாடு முழுவதிலும் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அந்த அமைப்பு நாட்டை முடக்க திட்டமிட்டிருந்த நிலையில், துரிதமாக செயல்பட்ட ஜனாதிபதி மேக்ரான், விரைவாக புதிய பிரதமரை நியமித்துள்ளார்.
ஆக, ஏற்கனவே போராட்டங்களை எதிர்கொண்ட பழக்கம் உடைய லெக்கார்னு, இந்த வேலைநிறுத்தத்தை எதிர்கொள்வதுடன், அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் பட்ஜெட் ஒன்றையும் முன்வைக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |