எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் பிரான்ஸ்: உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதியளித்துள்ள விவகாரம்
அமெரிக்கா வழங்கியுள்ள நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யாவுக்குள் தாக்க உக்ரைனுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதியளித்துள்ள விவகாரம், மூன்றாம் உலகப்போர் உருவாகிவிடுமோ என்ற பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் பிரான்ஸ்
அமெரிக்காவின் முடிவு ஏற்கனவே ரஷ்யாவுக்கு ஆத்திரத்தை மூட்டியுள்ள நிலையில், மேக்ரான் அமெரிக்காவின் முடிவு குறித்து விமர்சித்துள்ள விடயம் இன்னமும் நிலைமையை மோசமாக்கியுள்ளது.
அமெரிக்கா வழங்கியுள்ள நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யாவுக்குள் தாக்க உக்ரைனுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதியளித்துள்ளது நல்ல முடிவு என புகழ்ந்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.
பிரேசிலில் நடைபெறும் G20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் கலந்துகொண்டுள்ள நிலையில், அமெரிக்காவின் முடிவு நல்ல ஒரு முடிவு என்று கூறியுள்ளார் மேக்ரான்.
ஆனால், ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான ரஷ்யாவின் நிரந்தர பிரதிநிதியான Vasily Nebenzya என்பவர், ஜோ பைடன் தனது பதவி முடிந்து வீட்டுக்குப் போகும் நேரத்தில் இப்படி ஒரு விடயத்தைச் செய்துள்ளார். அவருக்கு அதனால் இழப்பு எதுவும் இல்லை.
ஆனால், அவரைப் பார்த்து, தொலைநோக்குப் பார்வையில்லாத பிரான்சும் பிரித்தானியாவும் போருக்குள் தாங்களும் தலையிட்டு, மற்ற ஐரோப்பிய நாடுகளையும் போருக்குள் முழுமையாக இழுக்குமானால், கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.
ஆகவே, காலம் கடக்கும் முன் அவர்கள் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது என எச்சரித்துள்ளார் Vasily Nebenzya.
இப்படிப்பட்ட சூழலில், அமெரிக்காவின் முடிவு ஏற்கனவே ரஷ்யாவுக்கு ஆத்திரத்தை மூட்டியுள்ள நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல, மேக்ரான் அமெரிக்காவின் முடிவு குறித்து விமர்சித்துள்ளது என்ன பின்விளைவுகளை ஏற்படுத்தப்போகிறதோ தெரியாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |