போர் அடிப்பதால் கோடியில் சம்பளம் தரும் Microsoft வேலையை உதறிய ஊழியர்! எதற்காக தெரியுமா?
மைக்ரோசாப்ட் ஊழியர் ஒருவர் போர் அடிப்பதாக கூறி ஒரு கோடி ரூபாய் சம்பளம் தரும் வேலையை உதறியுள்ளார்.
யார் அவர்?
Microsoft நிறுவனத்தில் 6 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் ருசித் கார்க் (Ruchit Garg). இவர், கடந்த 2011 -ம் ஆண்டில் தொழில்நுட்ப நிறுவனங்களின் தரவரிசையில் முன்னனியில் இருந்த Microsoft நிறுவனத்தில் இருந்து தனது வேலையை ராஜினாமா செய்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "எனக்கு சலிப்பாக இருந்தது. அதுவும் நான் தவறான நபராக உணர்ந்தேன். அதனால், ஒரு தொழிலை நடத்த விரும்பினேன்" என்றார். பின்னர், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பினார்.
Harvesting தளம்
விவசாயத் துறையில் புரட்சியை ஏற்படுத்துவதற்காக ஸ்டார்ட்அப் ஹார்வெஸ்டிங் (Harvesting) என்ற தளத்தை ருசித் கார்க் நிறுவினார்.
உத்தரபிரதேசத்தில் விவசாயியாக இருந்த தாத்தாவிடம் கற்றுக்கொண்டதை வைத்து, சிறு விவசாயிகளை நுகர்வோருடன் நேரடியாக இணைத்து இடைத்தரகர்களை ஒழிப்பதன் மூலம் அவர்கள் வருமானத்தை பெறுவதற்கு தளம் ஒன்றை உருவாக்க முயன்றார்.
இந்த தளமானது விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை பெறுவதற்கு உதவுகிறது. அதாவது விவசாயிகள் தயாரித்த பொருட்களை Online மற்றும் offline-ல் விற்க உதவுதாக Ruchit Garg கூறுகிறார்.
சிறு வயதிலேயே தந்தையை இழந்த Ruchit Garg, Harvard Business Review புத்தகத்தில் உத்வேகம் அடைந்தார்.
இவரது தாயார் லக்னோவில் உள்ள இந்திய ரயில்வே நூலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்த காலத்தில் தான் தொழிலில் தனது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும், அந்த நூலகத்தில் புத்தகங்களை படித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, 2018 -ம் ஆண்டு சிறு விவசாயிகளுக்கான நிதிச் சேர்க்கை பற்றி பேசுவதற்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு Ruchit Garg அழைக்கப்பட்டார். அந்த சம்பவம் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |