கழிவறை டிஷ்யூ பேப்பரில் ராஜினாமா கடிதம் - நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுத்த ஊழியர்

Singapore
By Karthikraja Apr 15, 2025 04:12 PM GMT
Report

நிறுவனத்தில் பணி ஊழியர்கள் சம்பளத்தை தாண்டி, தகுந்த மரியாதை, திறமைக்கேற்ற ஊதிய உயர்வு ஆகியவற்றை நிறுவனத்திடமிருந்து எதிர்பார்க்கின்றனர். 

சிலர் நல்ல ஊதியம் கிடைத்தாலும், நிறுவனத்தில் நடத்தப்படும் விதம் பிடிக்காமல், தங்கள் வேலையை ராஜினாமா செய்வது உண்டு. 

டிஷ்யூ பேப்பரில் ராஜினாமா 

கழிவறை டிஷ்யூ பேப்பரில் ராஜினாமா கடிதம் - நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுத்த ஊழியர் | Employee Writes Resignation Letter In Toilet Paper

தற்போது சிங்கப்பூரை சேர்ந்த ஊழியர் ஒருவர், இதே போல் அலுவலகத்தில் மோசமாக நடத்தப்பட்டதால், தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

இதற்கான ராஜினாமா கடிதத்தை கழிவறையில் பயன்படுத்தும் டிஸ்யூ பேப்பரில் எழுதி தான் வேலைபார்த்த நிறுவனத்தில் வழங்கியுள்ளார்.

அந்த கடிதத்தில், "இந்த நிறுவனம் என்னை எப்படி நடத்தியது என்பதை உணர்த்துவதற்காக நான் ராஜினாமாவுக்கு இந்த காகிதத்தை தேர்ந்தெடுத்தேன். நான் வெளியேறுகிறேன்" என எழுதியுள்ளார். 

resignation letter in toilet paper

ஆஞ்சிலா யோஹ்( angela yeoh) என்ற பெண் தொழிலதிபர், இந்த கடிதத்தை தனது Linkedin பக்கத்தில் பகிர்ந்து, ஊழியர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

resignation letter in toilet paper angela yeoh

அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஊழியர்கள் உண்மையாக பாராட்டப்படுவதை உணர வையுங்கள். நிறுவனத்தை விட்டு வெளியேறினாலும் நன்றியுணர்வுடன் வெளியேறவேண்டும், மன கசப்புடன் அல்ல நிறுவனங்கள் ஊழியர்களை மரியாதையாக நடத்த வேண்டும்.

ஊழியரை சின்ன விஷயங்களுக்கு பாராட்டுவதால்கூட, வேலையில் பல மாற்றங்கள் நடக்கும். பாராட்டுவதுதான் ஒருவரைத் தக்கவைப்பதற்கான கருவி மட்டுமல்ல, அது அவர் செய்யும் வேலைக்காக மட்டுமல்ல, அவர் யார் என்பதற்காகவும் எவ்வளவு மதிக்கப்படுகிறார் என்பதைக் காட்டும்" என தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US