உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு: வேலை நிறுத்த கடிதத்தை பார்த்து மயங்கி விழுந்த ஊழியர்கள்!
பாகிஸ்தானில் வேலை நிறுத்த கடிதத்தை பார்த்து தொழிலாளர்கள் கண்ணீர் விட்டதுடன், மயங்கி விழுந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
மூடப்பட்ட ஹோட்டல்
ஜூன் 11ம் திகதி பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இஸ்லாமாபாத்தில் உள்ள பிரபலமான Monal ஹோட்டலை மூட உத்தரவிட்டது.
இந்த உத்தரவு Monal ஹோட்டலுக்கு மட்டுமின்றி இஸ்லாமாபாத்தின் மார்கல்லா ஹில்ஸ் தேசிய பூங்கா(Margalla Hills National Park) அமைந்துள்ள அனைத்து ஹோட்டலுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினால் கிட்டத்தட்ட 700 பணியாளர்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர்.
இதையடுத்து வருகின்ற செப்டம்பர் 11ம் திகதி முதல் Monal ஹோட்டல் அதன் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி கொள்வதாக அறிவித்துள்ளது.
வைரல் வீடியோ
இந்நிலையில் சமூக ஊடகத்தில் ஊழியர்களின் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
அதில், தொழிலாளர்கள் சிலர் கண்ணீருடன் கையில் வேலை நிறுத்த கடிதத்துடன் நிற்பதையும், சிலர் அதிர்ச்சியான இந்த தருணத்தை தாங்க முடியாமல் மயங்கி விழுவதையும் பார்க்க முடிகிறது.
வேலை நிறுத்த கடிதத்தில் Monal ஹோட்டல் உரிமையாளர் Luqman Ali Afzal, வேலையில்லா திண்டாட்டத்தின் சவால்களை குறிப்பிட்டு தனது பிரியாவிடையை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |