சென்னையில் நில அதிர்வு? கட்டடம் அதிர்ந்ததாக கூறி அச்சத்தில் வெளியேறிய பணியாளர்கள்
சென்னை அண்ணா சாலையில் உள்ள கட்டடம் அதிர்ந்ததாக கூறி பணியாளர்கள் அச்சத்தில் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நில அதிர்வு?
சென்னை அண்ணா சாலையில் உள்ள 5 மாடி கட்டடம் அதிர்ந்ததாக கூறி ஆயிரக்கணக்கான பணியாளர்கள் அங்கிருந்து அச்சத்தில் வெளியேறியுள்ளனர்.
அதாவது, கட்டடம் லேசாக அதிர்ந்ததாக அங்கிருந்த வெளியேறிய ஊழியர்கள் பயத்துடன் தெரிவித்தனர்.
மேலும், பணியாளர்கள் உணர்ந்தது போல உண்மையாகவே நில அதிர்வு ஏற்பட்டதா அல்லது வதந்தி பரவியதா என்று அப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
எனினும், ரிக்டரில் பதிவாகாத அளவுக்கு சென்னையில் நில அதிர்வு வருவது வழக்கம் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |