வேலைசெய்யாமலே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஊழியர்கள்!
உலகில் அனைவரும் கஷ்டப்பட்டு கடும் உழைப்பால் தான் முன்வருவார்கள்.
ஆனால் ஒரு சில வேலைகளில் எதுவும் செய்யாமல் பணம் கிடைக்கிறது, அந்த வேலைகள் எவையென்று பார்க்கலாம்!!
கட்டிப்பிடி
வேலை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிஸ்ஸி ராபின்சன் என்ற மனநல ஆர்வலர் மக்களைக் கட்டிப்பிடிப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கிறார்.
மிஸ்ஸி ராபின்சன் தனது வாடிக்கையாளரை ஒரு இரவு கட்டிப்பிடிப்பதற்காக ரூ. 1.5 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கின்றார்.
எதுவும் செய்யாமல் சுற்றி திரிவற்கு சம்பளம்
ஜப்பானில் நபர் ஒருவர் எதுவும் செய்யாமல் பணம் சம்பாதிக்கிறார்.
சுற்றித் திரிவார், உணவு சாப்பிடுவார் ஆனால் சம்பளம் மட்டும் வாங்கிக்கொள்கின்றார்.
தூங்குவதற்கும் டிவி பார்ப்பதற்கும் சம்பளம்
உலகில் உள்ள ஒரு தனித்துவமான நிறுவனம் தூங்குவதற்கு மட்டுமே ஆட்களை வேலைக்கு அமர்த்துகின்றது.
அவர்கள் தூங்குவதற்கும் டிவி பார்ப்பதற்கும் நிறுவனம் ஏற்பாடு செய்கிறது.
அந்த நபர்களுக்கு நிறுவனம் பெரும் தொகையை வழங்குகிறது.
நூலகர்
புத்தகங்கள் அல்லது மற்ற பொருட்கள் சரியான இடத்தில் உள்ளதா இல்லையா என்பதை நீங்கள் பார்க்க வேண்டும்.
இதற்கு, மாதம், 20 முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை, ஆரம்ப சம்பளம் கிடைக்கின்றது.
ஐஸ்கிரீம் பரிசோதனையாளர்
ஐஸ்கிரீம் சோதனையாளர் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு வகை ஐஸ்கிரீமை சுவைத்து, அதில் சரியான அளவில் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதா மற்றும் சுவை ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
இதற்காக ஆண்டுக்கு 28 லட்சம் முதல் 78 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கின்றது.