SBI வங்கியில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது
பாரத ஸ்டேட் வங்கி ஆனது தற்போது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது.
சமீபத்தில் Specialist Cadre Officers பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்று வெளியானது.
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Chartered Accountant (CA)/ MBA(Finance) or equivalent / PGDM (Finance) தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாட்களுக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Credit Financial Analyst பணிக்கென 1 பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Chartered Accountant (CA)/ MBA(Finance) or equivalent / PGDM (Finance) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 வயது பூர்த்தியான மற்றும் 37 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கியின் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.
தகுதியானவர்கள் விண்ணப்பதாரர்கள் Shortlisting மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 29.08.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |