தமிழ்நாட்டில் நடந்த என்கவுண்டர்.., அம்பானி வீட்டு திருமணத்தை முடித்துவிட்டு வந்த ரஜினி என்ன சொன்னார்?
தமிழகத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நடந்த என்கவுண்டரை பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 -ம் தேதி மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 11 பேரை கைது செய்து காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட திருவேங்கடத்தை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் தப்பிக்க முயன்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் என்கவுண்டர் நடத்தியதாக சொல்லப்படுகிறது.
ரஜினிகாந்த் பேட்டி
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் ஜூலை 12 -ம் திகதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் நடைபெற்றது.
இத்திருமணத்திற்கு இந்திய தலைவர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை அழைப்பு விடுக்கப்பட்டது. அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் அம்பானி வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், திருமணத்தை முடித்துவிட்டு நேற்று இரவு நடிகர் ரஜினிகாந்த் சென்னைக்கு திருப்பினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "முகேஷ் அம்பானி வீட்டு கடைசி திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டது சந்தோஷமாக இருக்கிறது. கமல் நடித்துள்ள 'இந்தியன்-2' திரைப்படத்தை இன்று பார்க்க உள்ளேன்" என்றார்.
மேலும், தமிழகத்தில் நடந்த என்கவுண்டர் குறித்தும், சட்டம்-ஒழுங்கு குறித்தும் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் சொல்லாமல் நோ கமெண்ட்ஸ் என்று கூறிவிட்டு சென்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |