அந்த ஒற்றை முடிவு புடின் ஆட்சிக்கு ஆபத்தாக முடியும்: விடுக்கப்படும் எச்சரிக்கை
ரஷ்யா- உக்ரைன் இடையில் முழு வீச்சிலான போர் ஏற்படும் எனில், அது பேரழிவாகவும், ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆட்சிக்கு ஆபத்தாகவும் முடியும் என வரலாற்றாசிரியர் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த போருக்கு பின்னர் ரஷ்ய கூட்டமைப்பு வீழ்ச்சியடையும், நம்பினால் நம்புங்கள் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.
ரஷ்ய- அமெரிக்க வரலாற்றாசிரியரான Yuri Felshtinsky என்பவர் தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலிலே ரஷ்ய- உக்ரைன் மோதல் தொடர்பில் விமர்சனம் முன்வைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் சோவியத் ஒன்றியம் படையெடுப்பை முன்னெடுத்த பின்னர் எவ்வாறு வீழ்ச்சியை சந்தித்ததோ அதே நிலை ரஷ்யாவுக்கும் ஏற்படும் என தெரிவித்துள்ளார் அவர்.
2014ல் உக்ரைன் தம்மிடம் மண்டியிடும் என புடின் எதிர்பார்த்தார் எனவும், ஆனால் தற்போது அப்படியான ஒரு முடிவுக்கு உக்ரைன் ஒருபோதும் வந்துவிடாது என புடின் புரிந்துகொண்டார் எனவும் Yuri Felshtinsky குறிப்பிட்டுள்ளார்.
2014ல் புடின் நிர்வாகம் கிரிமியா தொடர்பில் முன்னெடுத்த தவறான முடிவு, சர்வதேச அளவில் நெருக்கடியை சந்திக்கும் நிலைக்கு ரஷ்யாவை தள்ளியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், முன்னாள் சோவித் குடியரசு பகுதிகளை அல்லது பிராந்தியங்களை கைப்பற்றும் முனைப்பை புடின் கைவிடப்போவதில்லை என்கிறார் Yuri Felshtinsky.
2008ல் ஜார்ஜியாவுடன் போர், 2014ல் ரஷ்யாவுடன் கிரிமியாவின் இணைப்பு உள்ளிட்டவை துண்டு துண்டாக ரஷ்யாவை விரிவுபடுத்துவதில் புடின் உறுதியாக இருக்கிறார் என்பதை காட்டுகிறது என்றார்.
தற்போதைய நெருக்கடிகள், போலியான பரப்புரைகள் உள்ளிட்டவை, புடின் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் என்பதையே காட்டுகிறது என குறிப்பிடுகிறார் Yuri Felshtinsky.
இருப்பினும், இந்த ராணுவ அணிவகுப்பு ஆயுதம் குவிப்பு உள்ளிட்டவைகள் வெறும் நாடகமாக இருக்கவும் வாய்ப்புள்ளது என்கிறார் அவர்.