ChatGPT-யில் அதிகரிக்கும் கவலைக்குரிய உரையாடல்! பயனர்களுக்கு Open AI எச்சரிக்கை
உயிரை மாய்த்துக் கொள்வது தொடர்பான உரையாடல்கள் சாட் ஜிபிடி-யில்(ChatGPT) அதிகரித்து இருப்பதாக Open AI நிறுவனம் தெரிவித்துள்ளது.
ChatGPT-யிடம் கவலைக்குரிய உரையாடல்
Open AI நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சாட்போட்டான ChatGPT-யிடம், உயிரை மாய்த்துக் கொள்வது தொடர்பான உரையாடலை வாரந்தோறும் கிட்டத்தட்ட 1.2 மில்லியன் பயனர்கள் நடத்துவதாக அந்த நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த சாட்ஜிபிடி பயனர்களில் உயிரை மாய்த்துக் கொள்ளும் திட்டம் அல்லது நோக்கத்தை வெளிப்படுத்தும் பயனர்கள் சுமார் 0.15% பேர் என்று Open AI நிறுவனம் தெரிவித்துள்ளது.
Open AI நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேனின் சமீபத்திய மதிப்பிட்டு படி, சாட் ஜிபிடி-யில் வாராந்திரம் சுமார் 800 மில்லியன் பயனர்கள் இருப்பதாகவும், அதன்படி உயிரை மாய்த்துக் கொள்வது குறித்து AI உடன் உரையாடும் மக்களின் எண்ணிக்கை கவலை உரியதாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இக்கட்டான சூழ்நிலையில் பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் உள்ள சவால்களையும் Open AI வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளது.
பயனர்களை பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் நீண்ட உரையாடல்களின் போது பலவீனமடைய கூடும் என்றும் Open AI நிறுவனம் எச்சரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |