எதிரி நம்மைப் பார்த்து பயப்பட வேண்டும், அவர்களை கண்டு நாம் பயப்படக்கூடாது! உக்ரைன் அதிரடி
உக்ரைன்-ரஷ்யா இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், எதிரி நம்மைப் பார்த்து பயப்பட வேண்டும், அவர்களை கண்டு நாம் பயப்படக்கூடாது என உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் எல்லைகளுக்கு அருகே ரஷ்யா அதன் படைகளை குவித்துள்ளார், கடந்த சில நாட்களாக இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
ரஷ்யா உடனான பதற்றம் குறித்து உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் Dmytro Kuleba கூறியதாவது, ரஷ்யா படையெடுத்து குறித்த மோசமான கணிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என மக்களை வலியுறுத்தியுள்ளார்.
இன்று, உக்ரைனிடம் ஒரு வலுவான இராணுவம் உள்ளது, இதுவரை இல்லாத அளவிற்கு சர்வதேச ஆதரவு மற்றும் உக்ரேனியர்களின் தங்கள் நாட்டின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
எதிரி நம்மைப் பார்த்து பயப்பட வேண்டும், அவர்களை கண்டு நாம் பயப்படக்கூடாது.
வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு பிரச்னைகள் உள்ளன, ஆனால் உக்ரைன் எதற்கும் தயாராக உள்ளது என்று Kuleba தெரிவித்துள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன், உக்ரைன் மூழ்கும் டைட்டானிக் கப்பல் அல்ல என கூறிய உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky, எந்த வித பதட்டமான சூழலும் இல்லாத நிலையில், நாட்டின் பொருளாதாரம் குறித்து ஊடகங்களும், அமெரிக்காவும் பீதியைத் தூண்டுவதாக குற்றம்சாட்டினார்.