6-1 என சீன அணியை அலறவிட்ட இங்கிலாந்து! உலகக்கோப்பையில் ஹாட்ரிக் வெற்றி
மகளிர் கால்பந்து உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி 6-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது.
ஆரம்பத்திலேயே அடி கொடுத்த இங்கிலாந்து
பிபா மகளிர் உலகக்கோப்பையில் இங்கிலாந்து - சீனா அணிகளுக்கு இடையிலான போட்டி அடிலெய்டின் Hindmarsh மைதானத்தில் நடந்தது.
ஆட்டத்தின் 4வது நிமிடத்திலேயே இங்கிலாந்தின் அலெஸ்சியா ரூஸ்ஸோ கோல் அடித்தார். அதன் பின்னர் அவர்களின் வேகத்தை சீனாவால் கட்டுப்படுத்த முடியவில்லை.
26வது நிமிடத்தில் லாரென் ஹெம்ப்பும், 41வது நிமிடத்தில் லாரென் ஜேம்ஸ் ஆகியோர் அபாரமாக கோல் அடித்தனர்.
Reuters
Reuters
பெனால்டியில் சீனாவுக்கு கோல்
சீன அணிக்கு 57வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட வாங் ஷுங் கோல் அடித்தார்.
இங்கிலாந்தின் லாரென் ஜேம்ஸ் 65வது நிமிடத்தில் காற்றில் பறந்து வந்த பந்தை அப்படியே கோலாக மாற்றினார்.
Getty Images
இங்கிலாந்து இமாலய வெற்றி
இதனைத் தொடர்ந்து க்ளோ கெல்லி 77வது நிமிடத்திலும், ரேச்சல் டேலி 84வது நிமிடத்திலும் கோல் விளாசினர்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 6-1 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றி பெற்றது. இது இங்கிலாந்தின் ஹாட்ரிக் வெற்றி ஆகும்.
Reuters
Reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |