பாகிஸ்தானுக்கு சொந்த மண்ணிலேயே மரண அடி! டெஸ்டில் புதிய வரலாறு படைத்த இங்கிலாந்து அணி
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் முல்தானில் நடந்தது.
முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 556 ஓட்டங்களும், இங்கிலாந்து 823/7 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் 267 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் களமிறங்கியது.
இங்கிலாந்து பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி 220 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் தரப்பில் அகா சல்மான் 63 (84) ஓட்டங்களும், ஆமீர் ஜமால் 55 (104) ஓட்டங்களும் எடுத்தனர். இங்கிலாந்தின் ஜேக் லீச் 4 விக்கெட்டுகளும், அட்கின்சன் மற்றும் கார்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
முதல் இன்னிங்சில் 500 ஓட்டங்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தும் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற முதல் அணி எனும் புதிய வரலாற்றை இங்கிலாந்து படைத்துள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |