இந்திய அணி படுமோசமான தோல்வி: 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி
இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இலக்கை நிர்ணயித்த இந்தியா
மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணியில் இஷான் கிஷன் 49, அபிஷேக் சர்மா 43, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 37 ஓட்டங்கள் குவித்து அசத்தினர்.
#ENGvIND🏏| 2nd T20I
— All India Radio News (@airnewsalerts) July 4, 2026
India set a target of 191 runs for England
Brief Score:
IND 190-7(20)
📍Manchester #INDvENG | pic.twitter.com/LvTPzYL3i2
வெறும் 15 வயது 99 நாட்களே ஆன சூர்யவன்ஷி தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களமிறங்கினார். அவர் 2 சிக்சர்கள் விளாசிய நிலையில் 10 பந்துகளில் 14 ஓட்டங்கள் குவித்தார்.
இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 190 ஓட்டங்கள் குவித்தது.
இங்கிலாந்து அணியின் அதிரடி
வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தேல் ஆட்டமிழக்காமல் 76 ஓட்டங்கள் குவித்தார்.
கேப்டன் ஹாரி புரூக் மற்றும் டாம் பேன்டன் தலா 39 ஓட்டங்கள் குவித்து அசத்தினர்.

ஜோப்ரா ஆர்ச்சர் கடைசி ஓவரில் 10 ஓட்டங்கள் குவித்து தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 19 ஓவர்கள் முடிவிலேயே வெறும் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 191 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.
5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |