முதல் முறையாக சீருடையில் தம்பதி பெயர்களை வைத்துக் கொண்ட ஓரினச்சேர்க்கை வீராங்கனைகள்! இங்கிலாந்து அணி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இங்கிலாந்து மகளிர் அணி வீராங்கனைகள் சிவெர் மற்றும் பிரண்ட் தங்கள் தம்பதி பெயர்களை சீருடையில் வைத்துக் கொண்டதை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
காதல் தம்பதி
ஆல்ரவுண்டர் வீராங்கனைகளான நடாலி சிவெர், கேத்தரின் பிரண்ட் இருவரும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு முன்பு இந்த ஜோடி ஐந்து ஆண்டு கால உறவில் இருந்தது. 2017ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் சிவெர் - பிரண்ட் முக்கிய பங்கு வகித்தனர்.
@Jason McCawley/ICC/Getty Images
இந்த நிலையில் இருவரது அணியின் சீருடையிலும் தம்பதி என்பதை குறிக்கும் வகையில் ''Sciver-Brunt'' என அச்சிடப்பட்டுள்ளது. 39, 26 ஆகிய எண்கள் மூலம் இருவரும் வித்தியாசப்படுத்தப்படுவர்.
ட்விட்டர் பதிவு
இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், 'Scorecard-யில் இரண்டு புதிய பெயர்கள்! எங்கள் ஆல்-ரவுண்டர்கள் தங்கள் திருமணமான பெயரை முன்னோக்கி நகர்த்துவார்கள். Sciver-Brunt என தங்களை அறிமுகப்படுத்துவார்கள்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Two new names on the scorecard!
— England Cricket (@englandcricket) January 30, 2023
Our all-rounders will go by their married name moving forward - introducing the Sciver-Brunts. ❤️ pic.twitter.com/lGqYniVPNS
@imfemalecricket