நீண்டநாள் காதலியை திருமணம் செய்துகொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை
இங்கிலாந்தின் நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனை டேனி வியாட் (Danii Wyatt) தனது நீண்டநாள் காதலியை மணந்தார்.
டேனி வியாட் தனது காதலியான ஜார்ஜ் ஹாட்ஜுடனை (Georgie Hodge) திருமணம் செய்து கொண்டார்.
வியாட் மற்றும் ஹாட்ஜ் ஜூன் 10-ஆம் திகதி (திங்கட்கிழமை) குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மோதிரங்களை மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.
திருமண விழாவிற்கு இருவரும் வெள்ளை நிற கவுன் அணிந்திருந்தனர். அதன்பிறகு, வியாட் மற்றும் ஹாட்ஜ் ஆகியோர் பூங்கொத்துகளை பிடித்தபடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.
வியாட், 'எங்கள் உறவை அனைவருக்கும் தெரியப்படுத்துகிறோம்' என்று சமூக ஊடகப் பதிவு மூலம் ரசிகர்களுடன் தங்கள் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
புகைப்படங்களைப் பார்த்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களும், வியாட்டின் நண்பர்களும் புது ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
டேனி வியாட், 'மேட்ரிமோனி' செயலியில் ஹாட்ஜுடனை சந்தித்தார். வியாட் மற்றும் ஹாட்ஜ் இடையேயான நட்பு மலர்ந்து காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர்.
இப்போது, இருவரும் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் யோசனையுடன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |