கத்தார் உலகக்கோப்பையில் பயத்தை காட்டிய அமெரிக்கா! ஏமாற்றத்தால் புலம்பும் இங்கிலாந்து ரசிகர்கள்
ஃபிபா கால்பந்து உலகக்கோப்பையில் நேற்று நடந்த இங்கிலாந்து - அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்தது.
டிராவில் முடிந்த போட்டி
அல் பய்ட் மைதானத்தில் நேற்று நடந்த உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஆரம்பத்தில் அமெரிக்காவின் கோல் முயற்சிகளுக்கு இங்கிலாந்து அணி முட்டுக்கட்டை போட்டது. அதன் பின்னர் இரண்டாம் பாதியில் அமெரிக்க அணி வீரர்கள் இங்கிலாந்துக்கு அதிக நெருக்கடி கொடுத்தனர்.
@Paul ELLIS / AFP
இதனால் கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால், போட்டி 0-0 என சமனில் முடிந்தது. இங்கிலாந்து ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
@Getty Images
இங்கிலாந்து ரசிகர்கள் புலம்பல்
தங்கள் அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த இங்கிலாந்து ரசிகர்கள், ஆட்டம் சமனில் முடிந்ததால் புலம்பி வருகின்றனர்.
@Richard Sellers/Getty Images
போட்டி குறித்து இங்கிலாந்து அணி ரசிகர் ஜேமி ஸ்டாண்டல் கூறுகையில், 'இந்தப் போட்டிக்கு முன்பே சௌத்கேட் (இங்கிலாந்து அணி மேனேஜர்) நிறைய விடயங்களை மாற்றியிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். இங்கிலாந்து இன்னும் சிறப்பாக செய்திருக்க முடியும் என்று நினைக்கிறேன். அமெரிக்கா நன்றாக விளையாடியது, ஆனால் இங்கிலாந்து மோசமாக, மிகவும் மோசமாக விளையாடியது' என தெரிவித்தார்.
@PA
ஆனால், அமெரிக்க ரசிகர்களோ தங்கள் டிரா செய்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும், நாக் அவுட் சுற்றுக்கு அமெரிக்கா முன்னேறும் என நம்புவதாகவும் மகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ளனர்.
@Reuters