FIFA உலகக்கோப்பை கால்பந்து: கோல் மழை பொழிந்த இங்கிலாந்து.. மிரட்டிய ஹரிகேன் படை
கலிஃபா மைதானத்தில் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி 6 -2 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தியது.
முதல் பாதியில் முன்னிலை
FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஈரான் அணிகள் மோதின.
கலிஃபா சர்வதேச மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்தியது. இங்கிலாந்தின் ஜுடே பெல்லிங்கம் ஆட்டத்தின் 35வது நிமிடத்திலும், புகாயோ சகா 43வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
முதல் பாதி முடியும் தருவாயில், கூடுதல் நேரத்தில் ரஹீம் ஸ்டெர்லிங் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 3-0 என முன்னிலை வகித்தது.
அதனைத் தொடர்ந்து ஈரான் பதிலடி கொடுக்கும் வகையில் இரண்டாம் பாதியில் செயல்பட்டது. ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் புகாயோ மீண்டும் ஒரு கோல் அடிக்க, அடுத்த மூன்று நிமிடங்களில் ஈரானின் மெஹ்தி கோல் அடித்தார்.
@AFP
ஆட்டநாயகன் புகாயோ சகா
அதன் பின்னர் 71 மற்றும் 89வது நிமிடங்களில் இங்கிலாந்து வீரர்கள் மார்கஸ் ராஷ்போர்ட், ஜேக் கிரீலிஷ் கோல் அடித்தனர். இறுதியில் கூடுதல் நேரத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மெஹ்தி தனது இரண்டாவது கோலை அடித்தார். அதுவே அந்த அணியின் கடைசி கோலாக அமைந்தது.
கூடுதல் நேரம் முடிந்த நிலையில் இங்கிலாந்து 6 - 2 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தியது. இரண்டு கோல்கள் அடித்து மிரட்டிய இங்கிலாந்து வீரர் சகா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
@FIFAWorldCup(Twitter)
@FIFAWorldCup(Twitter)