மகாராணி எலிசபெத்திற்கு மரியாதை..எழுந்து நின்ற ஒட்டுமொத்த கிரிக்கெட் மைதானம்..இரங்கல் வீடியோ
கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் ராணி எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்திய கிரிக்கெட் வீரர்கள்
இரங்கல் பாடல் பாட எழுந்து நின்ற ஒட்டுமொத்த மைதானம்
மறைந்த ராணி எலிசபெத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் மைதானத்தில் பாடல் பாடி அஞ்சலி செலுத்தினர்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் வயது மூப்பு காரணமாக தனது 96வது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
செப்டம்பர் 8ஆம் திகதி தொடங்கவிருந்த இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மழை காரணமாக இரண்டு நாட்கள் தடைபட்டது.
A beautiful few moments as cricket pays its respects to Her Majesty The Queen. pic.twitter.com/3QnZiFEOKq
— England Cricket (@englandcricket) September 10, 2022
அதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளான இன்று முதல்நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக மறைந்த ராணி எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதற்காக ஒட்டுமொத்த மைதானமும் எழுந்து நின்றது. பெண்ணொருவர் பாடல் ஒன்றை பாட இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க வீரர்கள் அவருடன் சேர்ந்து பாடி ராணிக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் ஆட்டம் தொடங்கியது. தென் ஆப்பிரிக்க அணி முதலில் களமிறங்கி துடுப்பாட்டம் செய்து வருகிறது.