Ind vs Eng 2nd ODI: இங்கிலாந்தை ஈசியாக வீழ்த்திய இந்திய அணி
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
கட்டாக்கில் உள்ள பாராபதி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதைத்தொடர்ந்து, இந்திய அணி 44.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது.
கேப்டன் ரோகித் சர்மா ஒருநாள் அரங்கில் தனது 32-வது சதத்தை பதிவு செய்தார். ஷுப்மன் கில் 60 ஓட்டங்கள் எடுத்தார். ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் 69 ஓட்டங்களும், பென் டக்கெட் 65 ஓட்டங்களும் எடுத்தனர். ஜேமி ஓவர்டன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இத்தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டி பிப்ரவரி 12-ஆம் திகதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India vs England 2nd ODI, England vs India 3 ODI Series