தாறுமாறான ஆட்டம்.. மிரட்டல் சதம்! இமாலய வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து
நாட்டிங்காம் டெஸ்டில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.
டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 553 ஓட்டங்கள் குவித்தது. மிட்சேல் 190 ஓட்டங்களும், டாம் ப்ளெண்டல் 106 ஓட்டங்களும் விளாசினர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 539 ஓட்டங்கள் குவித்தது. ஜோ ரூட் 176 ஓட்டங்களும், போப் 145 ஓட்டங்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் போல்ட் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதன் பின்னர் 14 ஓட்டங்கள் முன்னிலையுடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 284 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 299 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கடைசி நாளில் இவ்வளவு பெரிய இலக்கை எட்டுவது கடினம். எனவே ஆட்டம் டிராவில் தான் முடியும் என கருதப்பட்டது. ஆனால், இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸும் டி20 கிரிக்கெட்டை போல் ஆடினர்.
அதிரடியில் மிரட்டிய பேர்ஸ்டோவ் 77 பந்துகளிலேயே சதம் அடித்தார். இது அவருக்கு 9வது டெஸ்ட் சதம் ஆகும். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் விளாசிய இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். வெற்றிக்கு 27 ஓட்டங்கள் என்ற நிலையில் பேர்ஸ்டோவ் ஆட்டமிழந்தார். அவர் 92 பந்துகளில் 7 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 136 ஓட்டங்கள் எடுத்தார்.
அவருக்கு ஈடுகொடுத்து விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 70 பந்துகளில் 75 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். இங்கிலாந்து அணி சரியாக 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி லீட்ஸில் 23ஆம் திகதி தொடங்குகிறது.
Five days of ups, downs, hope, doubt, exhaustion, agony and now ecstasy.
— England Cricket (@englandcricket) June 14, 2022
Winning after five days. It just means more.
??????? #ENGvNZ ?? pic.twitter.com/IrgBu9vUXy