நாங்கள் தந்தை - மகள் கிடையாது! திருமண நிச்சயதார்த்தம் முடிந்த தம்பதி சந்திக்கும் ஒரு சிக்கலான பிரச்சனை
அமெரிக்காவை சேர்ந்த ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளவுள்ள நிலையில் அவர்களை பலரும் அப்பா மற்றும் மகள் என நினைத்து விடுகின்றனர்.
இதற்கு காரணம் இருவருக்குள் இருக்கும் வயது வித்தியாசம் தான். எமிலி டவுனிங் (26) என்ற பெண்ணும் மைக்கேல் ஜஸ்டின் (45) என்பவரும் இரண்டாண்டுகளாக காதலித்து வரும் நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.
செவிலியரான எமிலிக்கும், மைக்கேலுக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் 19 ஆகும். இது தான் இவர்களுக்கு சமுதாயத்தில் பல இடங்களில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது.
அதன்படி தங்கள் உறவை "புரிந்து கொள்ளாத" நபர்கள் பலர் இருப்பதாக இருவரும் கூறுகிறார்கள். எமிலி கூறுகையில், என்னையும், மைக்கேலையும் பலரும் தந்தை மற்றும் மகள் என நினைத்து விடுகின்றனர்.
Instagram/@emdowning
வருங்கால கணவரை உங்கள் அப்பா என்று யாராவது கேட்கும் ஒவ்வொரு முறையும் உங்கள் வாழ்க்கையில் ஐந்து ஆண்டுகள் சேர்க்கப்படும் (கிண்டலாக கூறுகிறார்).
இது எங்களுக்கு பழகிவிட்டது. சமீபத்தில் தான் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது என கூறியுள்ளார். இவர்களின் வீடியோ டிக் டாக்கில் எப்போதும் வைரல் ரகம் தான்.
இந்த தம்பதியின் பதிவுகளுக்கு கமெண்ட் செய்த சிலர், குழந்தைகளை நீங்கள் விரும்பினால், அதற்கான முடிவை விரைவில் ஏடுங்கள் ஏனெனில், மைக்கேல் வயது ஒன்றும் குறைய போவதில்லை என விமர்சிக்கும் வகையில் பதிவிட்டுள்ளனர்.
அதே சமயத்தில், வயது உண்மையில் ஒரு எண் மட்டும் தான். நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் இருப்பதாகத் தெரிகிறது. நீங்கள் ஒரு அழகான ஜோடி என அவர்களுக்கு ஆதரவாகவும் பலரும் பதிவிட்டுள்ளனர்.
Instagram/@emdowning