வறண்ட பூமியில் டிராகன் விளைவித்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இளைஞர்.., யார் அந்த நபர்?
வறண்ட பூமியில் டிராகன் பழங்களை விளைவித்து கோடிகளில் வருவாய் ஈட்டும் இளைஞர் ஒருவரை பற்றி பார்க்கலாம்.
யார் அவர்?
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, சோலாபூரை சேர்ந்தவர் மகேஷ் அசாபே. இவருக்கு சிறு வயதில் இருந்து விவசாயத்தில் ஆர்வம் இருந்ததால் சோலாபூரில் உள்ள வேளாண் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பிடெக் பயின்றார். பின்னர் எம் டெக் முடித்தார்.
நாளிதழ் ஒன்றில் வந்த டிராகன் பழ கட்டுரையை வாசித்த போது, நம் ஊரில் ஏன் இந்த பழத்தை விளைவிக்க கூடாது என்ற யோசனை இவருக்கு வந்துள்ளது.
பொதுவாக டிராகன் பழ விளைச்சலுக்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படாது. குறைந்த அளவு தண்ணீரே போதுமானது. இதனால் இந்த யோசனையை தனது தந்தையிடம் கூறி, 3 ஏக்கர் நிலத்தில் 9,000 டிராகன் மரக்கன்றுகளை நட்டார்.
கோடிகளில் வருமானம்
பின்னர், முதல் ஆண்டில் ஒரு ஏக்கருக்கு 5 டன்கள் பழம் விளைந்து ரூ.5 லட்சம் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து இரண்டாவது ஆண்டில் 10 டன்கள் பழம் விளைந்து ரூ.10 லட்சம் கிடைத்தது. பின்னர் அவர், 20 ஏக்கரில் நிலம் வாங்கி டிராகன் பழ விவசாயத்தை செய்தார்.
தற்போது, இந்த இடங்களில் விளைச்சலை ஆரம்பித்து மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார். குறிப்பாக சூப்பர் மார்க்கெட் போன்ற கடைகளில் விற்பனை செய்து வருகிறார்.
அதோடு, ருக்மினி ஃபார்ம்ஸ் அண்ட் நர்சரி என்ற பெயரில் டிராகன் பழம் மரக்கன்றுகளையும் விற்பனை செய்கிறார். தற்போது, ஓராண்டில் மட்டும் டிராகன் பழங்கள் மூலம் 2 கோடி ரூபாய் வருமானம் பெறுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |