கொசுவலை விற்று கோடீஸ்வரரான தமிழர்.., வெளிநாடுகள் வரை செல்லும் புராடக்ட்
கொசுவலை தயாரித்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வெற்றி கண்ட தமிழர் ஒருவரை பற்றி தான் பார்க்க போகிறோம்.
யார் அவர்?
தமிழக மாவட்டமான கரூரை சேர்ந்தவர் சிவசாமி. இவர், கல்லூரி படிக்கும் சமயத்தில் கொசுவலை தயாரிக்கும் ஆலை ஒன்றிற்கு சென்றிருந்தார். அப்போது, எதிர்காலத்தில் இதைப்போல ஒரு ஆலையை உருவாக்கி, நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கொசுவலை தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தார்.
அப்போது, Long-lasting insecticidal net வகை வலைகளுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்திருந்தது. அதனால், அந்த தொழில்நுட்பத்தை மூலம் கொசுவலை ஆலையை நிறுவும் பணிகளை சிவசாமி மேற்கொண்டார்.
இவருக்கு முதலில் தொழில் தொடங்க பணம் இல்லாததால் தனது அறையை பயன்படுத்தினர். பின்னர், ரூ.1.25 லட்சம் கடன் வாங்கி கொசுவலை உற்பத்தியை தொடங்கினார்.
இதனைத்தொடர்ந்து 2012 -ம் ஆண்டு துராநெட் நிறுவனத்தை கையகப்படுத்தினார். அதன்பின், வெண்ணைமலையில் Shopika Impex என்ற பெயரில் ஆலையை நிறுவினார்.
இங்கு தயாரிக்கப்படும் கொசு வலைகள் ஆப்பிரிக்கா, தாய்லாந்து, சீனா, மலேசியா, இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நிறுவனத்தின் மதிப்பு
ஆப்பிரிக்காவில் கொசுக்களால் பரவக்கூடிய மலேரியாவால் மக்கள் இறப்பது அதிகம். இதனால், இந்த கொசு வலையை பயன்படுத்துங்கள் என்று கூறி விற்பனை செய்தார்.
இவரது நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2,400 கோடி ரூபாய் ஆகும். இந்திய பணக்காரர்கள் பட்டியல் 2022- ன் படி, சிவசாமி 582 -வது இடத்தில் உள்ளார். மேலும், இவரது நிறுவனம் மாதம் ஒன்றிற்கு 50 லட்சம் கொசுவலைகளை தயாரிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |