தமிழ்நாட்டுப் பொறியாளர்கள் இந்தி மொழி கற்க வேண்டும்.., ஸ்ரீதர் வேம்பு அறிவுரை
தமிழகத்தில் தொழில் முனைவோர் மற்றும் பொறியாளர்கள் தொழில் முன்னேற்றத்திற்காக இந்தி கற்க வேண்டும் என Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அறிவுறுத்தியுள்ளார்.
ஸ்ரீதர் வேம்பு அறிவுரை
வட மாநிலங்களில் மும்மொழிக்கொள்கை அமலில் உள்ளது. உத்தர பிரதேசம், பிஹார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, உத்தராகண்ட், இமாச்சால பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய 9 மாநிலங்கள் இந்த கொள்கையை பின்பற்றுகின்றன.
இந்த மாநிலங்களில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை மும்மொழி பின்பற்றப்படுகிறது. அவற்றில் ஆங்கிலமும், இந்தியும் கட்டாயப் பாடங்களாக உள்ளன.
ஆனால், தமிழக அரசு மும்மொழிக் கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் தொழில் முனைவோர் மற்றும் பொறியாளர்கள் தொழில் முன்னேற்றத்திற்காக இந்தி கற்க வேண்டும் என Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "இந்தியாவில் Zoho நிறுவனம் வேகமாக வளர்ந்து வருவதால், தமிழ்நாட்டின் கிராமப்புற பொறியாளர்கள் மும்பை மற்றும் டெல்லியில் உள்ள வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாகப் பணிபுரிகின்றனர்.
எங்கள் வணிகத்தின் பெரும்பகுதி இந்த நகரங்களிலிருந்தும் குஜராத்திலிருந்தும் இயக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் கிராமப்புற வேலைகள் அந்த வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் சிறப்பாகச் சேவை செய்வதைப் பொறுத்தது.
இந்தி தெரியாமல் இருப்பது பெரும்பாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு பெரிய குறைபாடு. இந்தி கற்றுக்கொள்வது நமக்கு புத்திசாலித்தனம். நான் கடந்த 5 வருடங்களில் இடைநிறுத்தமாக இந்தி வாசிக்கக் கற்றுக்கொண்டேன். இப்போது 20% பேசுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருப்பதால், தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்தி கற்றுக்கொள்வதில் புத்திசாலியாக இருப்பார்கள். அரசியலைப் புறக்கணிப்போம், மொழியைக் கற்போம்! இந்தி கற்றுக் கொள்வோம்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |