175 ஓட்டங்களில் சுருண்ட இங்கிலாந்து! திக்கிட வைத்த திக்னர்..தொடரை வென்று நியூசிலாந்து பதிலடி
அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 175 ஓட்டங்களுக்கு சுருண்டது.
ஜேமி ஓவர்டன் ருத்ர தாண்டவம்
முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜேமி ஸ்மித் 13 ஓட்டங்களிலும், ஜோ ரூட் 25 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, அணித்தலைவர் ஹாரி புரூக் (Harry Brook) அணியை மீட்டெடுக்க போராடினார்.
பெத்தேல் (18), பட்லர் (9) அடுத்தடுத்து வெளியேற, 34 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்திருந்த புரூக் 24வது ஓவரில் (சான்ட்னர் பந்துவீச்சு) அவுட் ஆனார்.
அப்போது அணியின் ஸ்கோர் 105 ஆக இருந்ததால், இங்கிலாந்து அணி 150 ஓட்டங்களை எட்டுமா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் ஜேமி ஓவர்டன் (Jamie Overton) அதிரடி ஆட்டத்தின் மூலம் நியூஸிலாந்திற்கு கடுமையான நெருக்கடி கொடுத்து ஸ்கோரை உயர்த்தினார்.
திக்னர் மிரட்டல்
பிளேயர் திக்னர் (Blair Tickner) தனது அபார பந்துவீச்சில் கடைசி விக்கெட்டுகளை கைப்பற்ற, இங்கிலாந்து அணி 36 ஓவர்களில் 175 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஜேமி ஓவர்டன் 28 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்கள் விளாசினார். திக்னர் 4 விக்கெட்டுகளும், நாதன் ஸ்மித் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய நியூசிலாந்து அணியில் வில் யங் டக்அவுட் ஆனார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 21 ஓட்டங்களில் வெளியேற, ரச்சின் ரவீந்திரா அரைசதம் அடித்தார். 
அவர் 58 பந்துகளில் 54 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்க, டேர்ல் மிட்சேல் (Daryl Mitchell) மற்றும் மிட்சேல் சான்ட்னர் (Mitchell Santner) நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றி பெற வைத்தனர்.
நியூசிலாந்து வெற்றி
டேர்ல் மிட்சேல் 59 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்களும், சான்ட்னர் 17 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்கள் விளாசினர்.
இங்கிலாந்து அணியின் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் (Jofra Archer) 3 விக்கெட்டுகளும், ஜேமி ஓவர்டன் மற்றும் அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தொடரைக் கைப்பற்றி, டி20 தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுத்தது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |