143 ஆண்டுகளில் முதல் முறை - ஆஷஸ் தொடரில் மோசமான சாதனையை படைத்த இங்கிலாந்து அவுஸ்திரேலியா
143 ஆண்டு கால ஆஷஸ் தொடரில், முதல்முறையாக அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மோசமான சாதனையை படைத்துள்ளது.
ஆஷஸ் தொடர்
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையேயான பிரபலமான ஆஷஸ் தொடர் இன்று அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டம் ஆடியது.
மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் விக்கெட்கள் மளமளவென சரிய, 32.5 ஓவர்களில் 172 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது இங்கிலாந்து அணி.

அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 52 ஓட்டங்களும், போப் 46 ஓட்டங்களும் குவித்தனர். அவுஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்கள் எடுத்து அசத்தினார்.
இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலியாவும், அடுத்தடுத்து தனது விக்கெட்களை இழந்தது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி 32 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 26 ஓட்டங்களும், கேமரூன் க்ரீன் 24 ஓட்டங்களும் எடுத்துள்ளனர். இங்கிலாந்து அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.
143 ஆண்டுகளில் முதல் முறை
ஆஷஸ் தொடர் 1882 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் நிலையில், 143 ஆண்டுகளில் இல்லாத மோசமான சாதனையை இரு அணிகளும் படைத்துள்ளன.
இங்கிலாந்து துடுப்பாட்டம் ஆடிய போது, ஒரு ஓட்டம் கூட எடுக்காமல், முதல் ஓவரின் கடைசி பந்தில் முதல் விக்கெட்டை இழந்தது.

இதே போல், அவுஸ்திரேலியா அணியும் தனது முதல் ஓவரின் 2வது பந்திலேயே ஒரு ஓட்டம் கூட எடுக்காமல் முதல் விக்கெட்டை இழந்தது.
மேலும், மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம், ஆஷஸ் தொடரில் 100 விக்கெட்கள் வீழ்த்திய முதல் இடது காய் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |