அவுஸ்திரேலியாவை பழிதீர்த்த ஸ்டோக்ஸ் படை! இரண்டே நாளில் முடிந்த ஆஷஸ்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சுருண்ட அவுஸ்திரேலியா
மெல்போர்னில் நடந்த ஆஷஸ் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகள் மோதின.
அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 152 ஓட்டங்களுக்கும், இங்கிலாந்து 110 ஓட்டங்களுக்கும் சுருண்டன.
இங்கிலாந்து வெற்றி
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலியா கார்ஸ், ஸ்டோக்ஸ், டங் ஆகியோரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 132 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் (Travis Head) 46 ஓட்டங்கள் எடுத்தார். கார்ஸ் 4 விக்கெட்டுகளும், ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் 175 ஓட்டங்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 32.2 ஓவரிலேயே வெற்றி பெற்றது. ஜக் கிராவ்லே 37 ஓட்டங்களும், பென் டக்கெட் 34 ஓட்டங்களும், ஜேக்கப் பெத்தல் 40 ஓட்டங்களும் எடுத்தனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |