படுதோல்விக்கு அவுஸ்திரேலியாவை பழிதீர்த்த இங்கிலாந்து அணி
England beat australia by 135 runs: அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
அடிலெய்டில் நடந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாம் பான்டன் 121 ஓட்டங்கள்
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் நடந்தது.
முதலில் ஆடிய இங்கிலாந்து அணியில் ருத்ரதாண்டவம் ஆடிய டாம் பான்டன் (Tom Banton) 121 ஓட்டங்கள் விளாசினார்.
மேலும் ஜோ ரூட் (62), ஜோர்டன் காக்ஸ் (67), வில் ஜேக்ஸ் (54) ஆகியோர் அரைசதம் விளாச இங்கிலாந்து 355 ஓட்டங்கள் குவித்தது.
சுருண்ட அவுஸ்திரேலிய அணி
பின்னர் இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அவுஸ்திரேலிய அணி 44.3 ஓவர்களில் 220 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் போட்டியில் அடைந்த படுதோல்விக்கு பழிதீர்த்தது.
கேமரூன் கிரீன் (Cameron Green) 64 (82) ஓட்டங்களும், மேட் ரென்ஷா (Matt Renshaw) 63 (74) ஓட்டங்களும் எடுத்தனர்.
கஸ் அட்கின்ஸன் (Gus Atkinson) 4 விக்கெட்டுகளும், டாவ்ஸன் மற்றும் சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
