சோபனாவின் போராட்டம் வீண்: வங்காளதேசத்தை சிதைத்த இங்கிலாந்து அணி
வங்காளதேசத்திற்கு எதிரான மகளிர் உலகக்கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சோபனா மோஸ்தரி
கவுகாத்தியில் நேற்று நடந்த மகளிர் உலகக்கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின.
முதலில் ஆடிய வங்காளதேச அணி 49.4 ஓவர்களுக்கு 178 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
ஸ்கோரை உயர்த்த போராடிய சோபனா மோஸ்தரி (Sobhana Mostary) 108 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் எடுத்தார்.
கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ரபேயா கான் (Rabeya Khan) 27 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்கள் விளாசினார்.
இங்கிலாந்து வெற்றி
சோபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளும், சார்லி டீன், அலிஸ் கேப்சி மற்றும் லின்சே ஸ்மித் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 46.1 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 182 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஹீதர் நைட் (Heather Knight) 79 ஓட்டங்களும், சார்லி டீன் 27 ஓட்டங்களும் எடுத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |