யூரோ கிண்ணம்: பரபரப்பான ஆட்டத்தில் கடைசி நிமிடத்தில் கோல்..நெதர்லாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து
யூரோ கிண்ண கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது.
சேவி சைமன்ஸ் கோல்
Signal Iduna Park மைதானத்தில் நடந்த Euro 2024 இரண்டாவது அரையிறுதியில், இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஆட்டத்தின் 7வது நிமிடத்திலேயே நெதர்லாந்தின் சேவி சைமன்ஸ் (Xavi Simons) கோல் அடித்து இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு 15வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட அணித்தலைவர் ஹரி கேன் (Harry Kane) கோலாக (18வது நிமிடம்) மாற்றினார்.
ஹரி கேன் கோல்
இதனால் முதல் பாதி 1-1 என சமநிலையில் இருந்தது. இரண்டாம் பாதியில் வெற்றி கோலை அடிக்க இரு அணி வீரர்களும் போராடினர்.
ஒரு வழியாக 90வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் ஓலி வாட்கின்ஸ் (Ollie Watkins) கோல் அடித்தார்.
பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் மேற்கொண்டு கோல் விழாததால், இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |