கடைசிவரை போராடி 97 ஓட்டங்கள் விளாசிய ஷதாப்: பாகிஸ்தானை பழிதீர்த்த இங்கிலாந்து அணி
england beat pakistan by 20 runs:பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லாகூரில் நடந்த முத்தரப்பு தொடரின் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
பென் டக்கெட் 105 ஓட்டங்கள்
முத்தரப்பு ஒருநாள் தொடரின் 4வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் லாகூரில் மோதின.
முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 241 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. பென் டக்கெட் 105 ஓட்டங்கள் குவித்தார். ஷாஹீன் அஃப்ரிடி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் ஷதாப் கான் (Shadab Khan) தனியாளாக வெற்றிக்காக போராடினார்.
இங்கிலாந்து வெற்றி
44.2 ஓவரில் பாகிஸ்தான் அணி 221 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, கடைசி விக்கெட்டாக ஷதாப் கான் 97 (83) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
